மட்டக்களப்பு .புதுக்குடியிருப்பு கதிரவன் கழகம் நடாத்திய சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு.












(கல்லடி செய்தியாளர்)

கதிரவன் கலைக் கழகம், கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் (KSDO) மற்றும் கதிரவன் பட்டிமன்றப் பேரவை ஆகியன ஒன்றிணைந்து நடத்திய
"ஆற்றலைப் போற்றுவோம் ஏற்றியோரைத் தேற்றுவோம்" எனும் தொனிப்பொருளில் நடத்திய
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு தாழங்குடா கதிரவன் இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  (01) சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது சிறுவர் மற்றும் முதியோரை கௌரவித்து பரிசுப் பொதிகள் வழங்கப் பட்டன. அத்தோடு சிறுவர்களின் கலைநிகழ்வுகள் மற்றும் முதியோரால் அரங்கேற்றப்பட்ட பாடல்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.

கதிரவன் தங்கராசா இன்பராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக மண்முனைப்பற்று பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் இ.சிவலிங்கம், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி ராதிகா கருணாகரன், மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய அதிபரும், கதிரவன் ஆலோசகருமான அ.குலேந்திரராசா, பாடசாலை அதிபர்கள் , மற்றும் கதிரவன் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.