சர்வதேச ஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!















(கல்லடி செய்தியாளர்)

ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளகளின் சர்வதேச நினைவு நாள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினமும் இன்று வியாழக்கிழமை (19) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நினைவு கூரல் நிகழ்வு ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இதுவரை உயிர்நீத்த ஊடகவியலாளர்கள், சிரேஷ்ட ஊடகர் நிமலராஜன் மற்றும் இஸ்ரேல்- பாலஸ்தீன போரில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு கூரப்பட்டனர்.

இந்நினைவு கூரலின் போது மாவட்டத்திலுள்ள பல ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.