(கல்லடி செய்தியாளர்)
முல்லைத்தீவு நீதியரசரின் பதவி விலகல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று வெள்ளிக்கிழமை (20) மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
மாவட்டத்தின் நகர்ப்புறப் பாடசாலைகளில் இரண்டாம் தவணைப் பரீட்சை நடத்தப்பட்டதால் மாணவர்களில் பெரும்பபாலானோர் வருகை தந்திருந்ததைக் காணமுடிந்தது.
அத்தோடு வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்கள் திறந்திருந்த போதிலும் மக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டது.
இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்களில் ஈடுபட்டதையும் அவதானிக்க முடிந்தது.