டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களில் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.

 


நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களில் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.

அண்மைக்காலமாக பெய்து வரும் மழை காரணமாக, முக்கியமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில், அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் அதிகளவு டெங்கு அபாய வலயங்கள் காணப்படுவதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, பிலியந்தலை, மொரட்டுவ, களனி, தொம்பே, ராகம, அத்தனகல்ல, கம்பளை, உடுநுவர, குண்டசாலை, மாத்தளை மற்றும் பதுளை ஆகிய பிரதேசங்கள் டெங்கு அபாய வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், அது டெங்கு என சந்தேகிக்கப்படும், மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.