கிழக்கு அறுகம்பையை நோக்கி படை எடுக்கும் உல்லாச பயணிகள் .

 


இலங்கையில் உல்லாசப் பிரயாணிகளை கவரக்கூடிய பல கடற்பிரதேசங்கள் இருந்த போதிலும், பொதுவாக கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள அறுகம்பே அலைச்சறுக்கு விளையாட்டு சாகசங்கள் நிகழ்த்துவதற்கு சாதகமாக அமைந்துள்ளது. 

இதற்கமைய அறுகம்பே மற்றும் அதனைச் சூழவுள்ள கடல் பிரதேசத்தில் அலைச்சறுக்கு விளையாடுவதற்கு 10 இடங்கள் உள்ளன. 

ஏப்ரல் மாதம் முதல் ஓக்டோபர் மாத இறுதிவரை அலைச்சறுக்கு சாகசங்களுக்கு கடலலை சாதகமாக அமைந்திருப்பதால் உல்லாச பயணிகள் அதிகம் வருவதை காணக்கூடியதாகவுள்ளது.