பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

 


பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் கலாநிதி ஹரினி அமரசூரிய உள்ளிட்ட குழுவினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (13) விசாரணைக்கு அழைக்கப்பட்டன.

அப்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிவித்தலை விடுத்தார்.