மட்டக்களப்பில் கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 


 

காஸா பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களை கண்டித்தும், இரு நாடுகளுக்கு இடையிலான யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவருமாறு வலியுறுத்தியும்
 மட்டக்களப்பில் கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காந்தி பூங்கா முன்பாக பாலஸ்தீன நட்புறவு சங்கத்தின் ஏற்பாட்டில், இன்றைய ஜும்மா தொழுகையின் பின்னர்
நாசகார இஸ்ரேல் ஒழிக, யுத்தத்தை நிறுத்து, பேச்சுவார்த்தைக்கு வா போன்ற கோசங்களை எழுப்பியவாறும் பதாகைகள் ஏந்தியவாறும்
போராட்டம் இடம்பெற்றது.
சுமார் 25க்கு மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.