தமது மேய்ச்சல் தரை காணி பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட்டு தமக்கான
தீர்வினை வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு
பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை, மீட்டுத்தர கோரி தொடர்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நேற்றிரவு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, தீப் பந்தங்களை ஏந்திப் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
தமது
பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் பாராமுகமாக இருப்பதாகவும் சில
அரசியல்வாதிகளும் அக்கறையற்ற நிலையில் உள்ளதாகவும் பண்ணையாளர்கள்
குற்றஞ்சாட்டினர்.