(கல்லடி செய்தியாளர்)
கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மாகாண மட்டத்தில் அரச உத்தியோகத்தர்களின் பல்துறைசார் திறனை வெளிப்படுத்தும் நோக்கில் நடத்திய மாகாண மட்ட பாடல் போட்டியில் வெற்றி பெற்ற அரச உத்தியோகத்தர் களுக்கான பரிசளிப்பு விழா நேற்று சனிக்கிழமை (07) மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சுகுணன், மட்டக்களப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சாமினி ரவிச்சந்திரா மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் உதயசிறிதர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலிருந்து போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய பல்வேறு திணைக்களகங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.