2023 கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இம்முறை பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பிக்க முடியாத மாணவர்களின் நலன் கருதி விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 2023 கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.