பலஸ்தீன கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்- ஹமாஸ்

 


இஸ்ரேலிய சிறையில் வாடும் பலஸ்தீன கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினர் நிபந்தனை விதித்துள்ளனர்.

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை 23வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த போர் நடவடிக்கையில் ஹமாஸ் அமைப்பினரை ஒட்டுமொத்தமாக அழிக்கும் நோக்கிலும், ஹமாஸ் படையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் பிணைக் கைதிகளை விடுவிக்கும் நோக்கிலும் இஸ்ரேலிய ராணுவ படை காசாவில் தரைவழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இஸ்ரேலிய இராணுவ படையின் இந்த ஆக்ரோஷமான தாக்குதலில் பலஸ்தீன மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் ஹமாஸ் அமைப்பை முழுவதும் ஒழிக்கும் வரை இந்த போர் தாக்குதலை நிறுத்த மாட்டோம் என என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தங்களிடம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டுமெனில் இஸ்ரேல் சிறையில் வாடும் பலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.