கல்விமாணி பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவில் விசேட சித்தி பெற்ற அசிரியர்களை
கெளரவிக்கும்
நிகழ்வு அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதியும்
சட்டத்தரணியுமான கி.புண்ணியமூர்த்தியின் தலைமையில் இடம்பெற்றது.
"ஆசிரியத்துள்
மகிழ்வோம்" எனும் தொனிப்பொருளில் ஆசிரியர்தின நிகழ்வு PGDE மட்டக்களப்பு
பிராந்திய நிலையத்தில் நேற்று (30) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சு.குலேந்திரகுமார் கலந்து சிறப்பித்தார்.
2022ஆம் கல்வியாண்டிற்கான கல்விமாணி பட்டப்பின் படிப்பு டிப்ளோமா (PGDE)
கற்கையில் விசேட சித்திபெற்ற 21 ஆசிரிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கதாகும்.