உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார
சபையினால் 6 இலட்சம் பெறுமதியான மானிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு
பூர்த்தியாக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாறை
மாவட்ட முகாமையாளர், விசேட அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி
பிரதேச செயலாளர், தேசிய வீடமைப்பு அதிகார சபை பொறியியலாளர், பிரதேச செயலக
உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், வீடமைப்பு
உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,
சமுர்த்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.