இலங்கைக்கான பலஸ்தீன தூதுவரை சஜித் சந்தித்துள்ளார்

 


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலான யுத்தத்தில் பலஸ்தீனத்திற்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர், பலஸ்தீன தூதுவருடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, ஏற்பட்டுள்ள மோதலை பேச்சுவார்த்தையினூடாக தீர்த்துக்கொள்வது, இருநாட்டு மக்களினதும் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மிக முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.