அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு சென்றுள்ளதாக கூறப்படும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் சரவணராஜா 20ஆம் திகதியே நாட்டை விட்டு வெளியேறிச் சென்று விட்டார் என்று புலனாய்வு செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் கொழும்பில் உள்ள ஆங்கிலமொழி அல்லாத மூன்று வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை சந்தித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் இப்போது எங்கே இருக்கின்றார் என்பதை இலங்கை உளவுப் பிரிவும் இந்திய உளவுப் பிரிவும் தேடுகின்றன. ஆனால் அவர் மிகவும் சிறப்பாக செயற்பட்டு நாட்டை விட்டு வெளியேறி முதலில் சிங்கப்பூர் சென்றிருக்கின்றார்.