முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் காலவரையறையின்றி தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பைச் செய்வதாக தீர்மானித்துள்ளனர்.
முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் அனைவரும் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகாது தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக இன்றுகாலை 10 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து அனைத்து சட்டத்தரணிகள் சங்கங்களின் சட்டத்தரணிகளும் இணைந்து பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.