பிரபல நடிகர் சித்தார்த் யாழ்ப்பாணம் வந்துள்ளார்

 


யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெறவுள்ள தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வுக்கு தென்னிந்திய இசை கலைஞர்கள் பலரும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். 

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

பிரபல நடிகர் சித்தார்த், பின்னணி பாடகர் அசல் கோளாறு ஆகிய பிரபலங்களும் வருகை தந்துள்ளனர்.

இசை நிகழ்வானது இன்றைய தினம்  சனிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. குறித்த இசை நிகழ்வினை பார்வையாளர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது .