அங்கவீனமுற்றோரின் அமைப்புக்களின் ஒன்றிணைந்த முன்னணியின் நாடளாவிய ரீதியில் உள்ள செவிப்புலன், பார்வை மற்றும் உடலியல் ரீதியாக அங்கவீனமானவர்கள் சிலர் (17) பாராளுமன்றத்தைப் பார்வையிடும் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற நடைமுறை தொடர்பில் புரிதலை பெற்றுக்கொள்வதற்கு மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இது ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின், பொதுமக்கள் வெளித்தொடர்பு பிரிவினால் அவர்களுக்கு பாராளுமன்ற முறைமை தொடர்பான தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டது.