இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு கோரும் கடிதம் மற்றும் வடக்கு, கிழக்கில் காணப்படுகின்ற சமகால நிலைமைகளை மையப்படுத்திய இராஜதந்திரிகளுக்கான கடிதம் ஆகியன இறுதியாகியுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக சந்தித்து விடயங்களை தெளிவுபடுத்தவதற்கான நேரத்தை ஒதுக்குமாறு கோருவதற்கு இணக்கம் எட்டப்பட்ட நிலையில் அதற்கான உத்தியோக பூர்வமான கடிதத்தின் வரைவும் இறுதியாகியுள்ளது என சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.