முனைக்காடு விவேகானந்தா மகா வித்தியாலயத்திற்கு மேசைப்பந்தாட்ட மேசையொன்று அன்பளிப்பு!

 




மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்தா மகா வித்தியாலயத்திற்கு அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இளங்கேஸ்வரன் என்பவரால் மேசைப்பந்தாட்ட மேசையொன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
விவேகானந்த மகா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் ஸ்ரீமுருகன் அவர்களின் மாணவரான அவுஸ்திரேலியாவில் வசிக்கும் கே. இளங்கேஸ்வரன் என்பவரால் வித்தியாலய மாணவர்களின் மேசைப்பந்தாட்ட விளையாட்டு திறன் வளர்ச்சிக்காக 150,000 ம் ரூபா பெறுமதியான மேசைப்பந்தாட்ட மேசை அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி நிதியுதவியின் மூலம் கொள்வனவு செய்யப்பட் மேசைப்பந்தாட்ட மேசையானது வித்தியாலய அதிபரிடமும் வித்தியாலய மாணவர்களிடமும் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
வித்தியாலய மாணவர்களின் விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்காக பழைய மாணவர் கே.இளங்கேஸ்வரன் அவர்களால் இவ் உதவி மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.