இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க சீனா செல்கிறார்

 


சிறிலங்கா அதிபர்  ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமாக இன்று(14)  சீனாவிற்கு பயணித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது அதிபர் ரணில் விக்ரமசிங்க சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பல அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

இதேவேளை சீனாவுடனான கடனை மறுசீரமைப்பது தொடர்பான உடன்படிக்கைகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார்.