கொத்மலை ஹெதுனுவெவ வெத்தலாவ பகுதியில் உள்ள மைதானத்தின் அடியில் இருந்து மர்மச் சத்தம் கேட்டதாலும், அச்சமடைந்த பிரதேசவாசிகள் இது குறித்து தெரிவித்ததையடுத்து, இது குறித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட செயலாளரும், மாவட்ட ஆணையாளருமான நந்தன கலகொட தெரிவித்தார்.
கொத்மலை ஹதுனுவெவ வெத்தலாவ பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் தெரிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் (18) நடாத்திய போதே மாவட்ட செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர், மழைக்காலத்தில் பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளிருந்து கேட்கும் மிக பயங்கரமான சத்தத்தால் அவதியுறும் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு தேவையான சூழலை தயார் செய்யும் நோக்கில் , குறித்த பகுதி கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் பரிசோதிக்கப்பட்டது. அங்கு ஆபத்தான அல்லது அனர்த்த நிலைமை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை மற்றும் புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தால் விசேட விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கொத்மலை பிரதேச செயலாளர் நதீரா லக்மால் கூறியதாவது, வெத்தலாவ விளையாட்டரங்கம் அமைந்துள்ள பகுதியிலிருந்து முதலில் ஏரி மற்றும் சத்தம் வந்தமை தொடர்பில் பிரதேசவாசிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம். புடலுஓயா பொலிஸ், கிராம சேவை உத்தியோகத்தர், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கொத்மலை அணைக்கட்டுக்கு பொறுப்பான அதிகாரிகள் வெத்தலாவ பிரதேசத்தில் உள்ள மைதானத்திற்கு சென்று முதற்கட்ட விசாரணைகளை அண்மையில் மேற்கொண்டனர்.
பொதுமக்கள் திருப்தி அடையாததால், மாவட்ட செயலாளரின் உத்தரவுப்படி, சம்பவம் குறித்து விசாரணை நடத்த, புவியியல் மற்றும் சுரங்கப் பிரிவுக்கு கடிதம் அனுப்பப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் செயல்படுத்த தயாராக உள்ளது.