வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படுமா ?

 


வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கொள்கைகள் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எனவும், இது தொடர்பில் அமைச்சரவையில் விரிவாக ஆராயப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொது மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டதாகவும், அதற்கு தேவையான கொள்கை தற்போது வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.