ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் விடுதலைசெய்யப்படு;ம் வரை காசாவிற்கு எரிபொருளையோ மின்சாரத்தையோ வழங்கப்போவதில்லை - இஸ்ரேலின் வலுசக்தி அமைச்சர்

 


ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்யும்வரை  காசாமீதான முற்றுகையை தளர்த்தப்போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசாவின் காயமடைந்தவர்களால் நிரம்பிவழியும் மருத்துவமனைகள்  பிரேத அறைகளாக மாறுவதை தவிர்க்கவேண்டும் என சர்வதேச செஞ்சிலுவை குழு மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே இஸ்ரேல் இதனை தெரிவித்துள்ளது.

ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள்  விடுதலைசெய்யப்படு;ம் வரை காசாவிற்கு எரிபொருளையோ மின்சாரத்தையோ வழங்கப்போவதில்லை என இஸ்ரேலின் வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக பதிவில் அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

மனிதாபிமானமா, கடத்தப்பட்டவர்கள் அனைவரும் விடுதலையாகும்வரை மீண்டும் இஸ்ரேல் திரும்பும்வரை  மின்சாரத்தை மீண்டும் வழங்கப்போவதில்லை  எரிபொருள் வாகனங்கள் எவையும் காசாவிற்குள் நுழையாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமானத்திற்கு மனிதாபிமானம் எங்களிற்கு ஒழுக்கநெறி குறித்து எவரும்போதிக்ககூடாது என அவர்தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மின்சாரம் எரிபொருள் விநியோகத்தை துண்டித்துள்ளது.