தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் முடங்கியது.

 


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் முடங்கியது.

மட்டக்களப்பில் மாடு வளர்ப்பதற்காக மக்கள் பயன்படுத்திய காணிகளை வெளியாட்கள் சிலர் அபகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பதாதைகளை ஏந்தியவாறு சபையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சாணக்கியன் ராசமாணிக்கம் தலைமையிலான எம்.பி.க்கள் குழு “அழிக்காதே, அழிக்காதே, எங்கள் நிலத்தை எங்களுக்கு கொடு! (எங்களைத் தாக்குவதை நிறுத்துங்கள்,எங்கள் நிலங்களை எங்களிடம் திருப்பி விடுங்கள்)  என்றும் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ​ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணனும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பார் என அவைத்தலைவர் சுசில் பிரேமஜயந்த அறிவித்ததையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.