இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலுக்கு விஜயம் செய்தார்.
அங்கு அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.
இஸ்ரேல் எதிர்கொண்ட இருண்ட நேரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாகவும் இஸ்ரேலின் வெற்றியை தான் நம்புவதாகவும் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
பணயக்கைதிகளை விடுவிக்க நெதன்யாகு எடுத்த முயற்சிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
மேலும் அனைத்து தரப்பினரையும் சேர்ந்த பொதுமக்கள் உயிரிழந்தது வருத்தம் அளிப்பதாக கூறிய சுனக், காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்களும் ஹமாஸ் அமைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் கூறினார்.
எனவே, காசா பகுதிக்குள் வெளிநாட்டு மனிதாபிமான உதவிகளை அனுமதித்த இஸ்ரேலுக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.