இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்வு.

 







சர்வதேச வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவின் புனானை கிழக்கு 211 பி பிரிவில் இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.எச்.முகம்மட் அவர்களின் நெறிப்படுத்தலில் அல் ஹம்றா முன்பள்ளி மாணவர்களுக்கான இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்வு 147 வது CBO அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வங்கி கட்டுப்பாட்டு சபை தலைவர் ஏ.பி.காதர்முகம்மட், Rcbo தலைவர் எஸ்.ரீ.பைறூஸ், முன்பள்ளி ஆசிரியை, CBO நிர்வாக உறுப்பிணர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.