இணையம் ஊடாக கடன் வழங்கும் போலி செயலிகள் குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இணையம் ஊடாக உடனடியாக கடன் வழங்குனர்களுக்கு தனிப்பட்ட விவரங்களை வழங்க வேண்டாம் என தெரிவித்துள்ளது.
"இணையம் ஊடாக கடன் வழங்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன, மேலும் அந்த நிறுவனங்களுக்கு தங்கள் விவரங்களை வழங்க வேண்டாம் என மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.