தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிக் கட்டுப்பாடுகளை அடுத்த வாரம் தளர்த்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) தெரிவித்தார்
பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் எஸ் குறியீடுகள் தொடர்பான திருத்தங்கள் திருத்தப்படும் என்றும் தேவையான உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார்
இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை சுங்கத்துறையின் வருமானம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் இது சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஏற்றுமதியையும் பாதித்துள்ளது என்றும் தெரிவித்தார்.
இறக்குமதியை தளர்த்துவது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த உதவும் என தாங்கள் நம்புவதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.