காசாவில் மருத்துவமனை தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என இஸ்ரேல் தக்க ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.
கசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் நடத்தப்பட்ட தாக்குதலால் 500 இற்கும் மேற்ப்பட்டோர் உயிழந்துள்ளனர், இது முழு உலகையும் அதிர்ச்சியடைய செய்தது.
குறித்த தாக்குதலினால் கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில், தாக்குதலை நிகழ்த்தியது இஸ்ரேல் என பாலஸ்தீனிய அதிகாரிகள் குற்றம் சாட்ட, இஸ்ரேல் தரப்பு அதை மறுத்துள்ளது.
மேலும், காசா மருத்துவமனை தாக்குதலுக்கு காரணம் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் என்னும் அமைப்பு என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அதேவேளை, குறித்த தாக்குதலுக்கான சரியான ஆதாரங்களாக ட்ரோன் காட்சிகள், சில உரையாடல்கள் ஆகியவற்றை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
அத்துடன், ஆதாரங்களை வெளியிட்ட இஸ்ரேல் பாதுகாப்புப் படை செய்தித்தொடர் கூறுகையில், அந்த பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் எதையும் அந்த நேரத்தில் நிகழ்த்தவில்லை.
இஸ்ரேல் ராணுவ ட்ரோன்கள் எடுத்த சில வீடியோ காட்சிகள், தாக்குதல் அருகிலிருந்து நிகழ்த்தப்பட்டதை காட்டுகிறது. பயங்கரவாதிகள் சிலர் ராக்கெட்கள் தவறுதலாக அருகிலேயே விழுந்ததைக் குறித்து பேசிக்கொள்ளும் உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளாார்.