சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள நிலையில் நாட்டிலும் எரிவாயுவின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இந்த நிலையில், இந்த மாதத்துக்கான எரிவாயு விலை திருத்தம் நாளை அறிவிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, எரிவாயுவின் விலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயுவின் விலை 145 ரூபாயாக அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.