சர்வதேச வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவின் செம்மண்ணோடை 208டி கிராம உத்தியோகத்தர் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வுகள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் வீ.ரீ.பாஹிரா அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
செம்மண்ணோடை 208டி கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள
பல் தேவை கட்டட வளாகம், சாட்டோ மைதானம் என்பன சிரமதானம் மூலமாக துப்பரவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகளில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் பிரதிநிதிகளும் உறுப்பினர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
அதேவேளை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவின் தியாவட்டவான் உள்ளிட்ட மேலும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.