ஹமாஸ் அமைப்பு கடத்திய பணயக்கைதிகளில் ஒருவர் இஸ்ரேல் படையினரால் மீட்பு

 


ஹமாஸ் அமைப்பு கடத்திய பணயக்கைதிகளில் ஒருவர் தம்மால் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் படைத்துறை தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு காசாவில் நடத்தப்பட்ட படைநடவடிக்கையின்போது இஸ்ரேலிய சிப்பாயான Ori Megedish மீட்கப்பட்டதாக IDF மற்றும் Shin Bet திங்களன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட அவர், தற்போது மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.