காஸாவில் இணையதள சேவை முடக்கப்பட்டது .

 


காஸாவில் இருந்த தொலைத்தொடர்பு கருவிகளை, இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் மூலம் தகர்த்துள்ளது. இதனால், அந்த பகுதியில் இணையதள சேவை முடங்கியுள்ளது.

காஸா பகுதியில் இருந்து மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் அமைப்பினர் தடுப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

ஹமாஸ் ஆயுதக் குழுவின் மீதான் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், காஸாவின் இணைய சேவைகளை இஸ்ரேல் முடக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.