மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் .

 

 


 மட்டக்களப்பு ஓட்டமாவடியில், ஆற்றுப் பிரதேசம் ஊடாக ஊருக்குள் புகுந்த யானையொன்று பொதுமக்களின் சொத்துக்களுக்குச் சேதமேற்படுத்தியுள்ளது.
ஓட்டமாவடி-02 ஜீ.எஸ்.ஓ வீதியில் வீடுகளின் மதில்களைச் தேப்படுத்திய யானை, பயன்தரு மரங்களையும் அழித்துள்ளது.
இரவு வேளையில் யானைகளால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலால், மக்கள் தூக்கம் இன்றி, அச்சத்துடன் வாழும் நிலை தோன்றியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊர்மனைக்குள் புகும் யானைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.