நாடாளுமன்றத்தில் தற்போது அரசியல் வாதிகள் குழுவல்ல, நாட்டை அழிக்கும் நோக்கில் செயற்படும் பயங்கரவாதிகளே இருப்பதாக மிஹிந்தல ரஜமஹா விகாரையின் தலைவர் வணக்கத்துக்குரிய
வலஹங்குனவேவே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களை நேசிக்கும் ஆட்சியாளர் யாரும் இல்லை என்றும், நல்லதோ கெட்டதோ, தங்களை வளப்படுத்திக் கொள்வதே அவர்களின் ஒரே நோக்கம் என்றும் அவர் கூறினார்.