மின்சாரக் கட்டணத்துடன் நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும் .

 


மின்சாரக் கட்டணத்துடன் நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும் என நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகத்தில் செய்யப்படும் பணிகளுக்கு அதிக மின்சாரம் செலவழிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட தண்ணீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.