ஹமாஸ் அமைப்பின் நோக்கம் வேறு, விடுதலைப் புலிகள் நோக்கம் வேறு. - சரத் வீரசேகர

 


 

இஸ்ரேல் பக்கம் நிற்கும் மேற்குலகமே இலங்கைமீது போர்க்குற்றங்களை சுமத்திவருகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஹமாஸ் அமைப்பை பயங்கரவாதிகள் எனக் கூறி காசா யுத்தத்தில் இன்று இஸ்ரேல் பக்கம் நிற்கும் மேற்குலக நாடுகள் அன்று ஈழப்போரில் விடுதலைப் புலிகளுக்காக முன்நின்றன.

தலைவர் பிரபாகரனை காப்பாற்றிக்கொள்வதற்காக அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் முயற்சித்தன எனவும் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இஸ்ரேல் - பலஸ்தீன போர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தி  நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

வன்னியில் நடைபெற்ற போருடன் காசா போரை ஒப்பிடுவது தவறு.

இன்று ஹமாஸ் அமைப்பை எதிர்க்கும் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கை போரில் விடுதலைப் புலிகள் பக்கமே நின்றன

எமது நாட்டை இரண்டாக்குவதற்காகவே விடுதலைப் புலிகள் போரிட்டனர். அந்த போரை நாம் முடிவுக்கு கொண்டுவந்தோம்.

ஹமாஸ் அமைப்பின் நோக்கம் வேறு,  விடுதலைப் புலிகள் நோக்கம் வேறு. எனவே , காசா போருடன் இலங்கை போரை ஒப்பிடமுடியாது.