சரக்கு ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது- இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை

 


இலங்கையின் சரக்கு ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2023 செப்டம்பரில் இலங்கையின் சரக்கு ஏற்றுமதி 11.88 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 951.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை சுங்கத்தால் வௌியிடப்பட்ட தற்காலிக தரவு அறிக்கையின் படி குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 14.94 சதவீதத்தால் சரக்கு ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி பொருட்கள், குறிப்பாக ஆடைகள் மற்றும் ரப்பர் மற்றும் ரப்பர் தொடர்பான பொருட்கள், தேங்காய் மற்றும் தேங்காய் தொடர்பான பொருட்கள் தேவை குறைவதால், சரக்கு ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.