இந்த ஆண்டு, கொரியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்று சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தாண்டியுள்ளது.
இது வரையிலான காலப்பகுதியில் 5,091 பேர் தென் கொரியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்று அங்கு சென்றுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்
தற்போது, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கொரிய மனித வளத் திணைக்களத்துடன் இணைந்து ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட இருநூறு தொழிலாளர்களை கொரியாவுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது.