சிவில் சமூக செயற்பாட்டாளர் லவக்குமாரிடம் பொலிசார் விசாரணை

 



வாழைச்சேனை பொலிசார் மற்றும் மட்டக்களப்பு விசேட பொலிஸ் குழுவினர், இன்று கிரானில் வசிக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர் லவக்குமாரின் வீட்டிற்கு சென்று
விசாரணைகனை மேற்கொண்டனர்.
வீட்டிற்கு வந்த ஆயுதம் தாங்கிய இனம் தெரியாத நபர்கள் தன்னை கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து, வாழைச்சேனை பொலிஸ் நிலையம் மற்றும் மட்டக்களப்பு
மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாக இன்று வாழைச்சேனை பொலிஸ்
நிலைய பொறுப்பதிகாரி லசந்தபண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
லவக்குமார் உட்பட அவரது மனைவி மற்றும் பிள்ளையிடம் வாக்கு மூலத்தினை பெற்றதுடன் அருகில் வசிப்பவர்களிடமும் விசாரணை முன்னெடுக்கப்பட்டதுடன், பிரதேசத்தில்
பொருத்தப்பட்ட சீ.சீ.ரீவி ஒளிப்பதிவு கருவிகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் இடம்பெற்றது.