(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கல்லடி தமிழருவி கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிறுவர் தினம் மற்றும் முதியோர்தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (01) கல்லடி தமிழருவி இல்லதத்தில் நடைபெற்றது.
தமிழருவி ஆசிரியர் எஸ்.சிவநிதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாணவர்களின் பாடல், கவிதை, நாடகம், கதைகூறல் ஆகிய நிகழ்வுகள் அரங்கேறின.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவிகளால் சிற்றுண்டிகள் பரிமாறி, லாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.