(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு கல்லடி, நொச்சிமுனை பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்து வந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (19) காலை இடம்பெற்றுள்ளது.
கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 2 ஆம் வருடத்திற்கான பல்கலைக்கழக கல்வியினை தொடர்ந்துவந்த 22 வயதான மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் மட்டக்களப்பு பழுகாமம் பகுதியை பூர்வீகமாகக் கொண்டதுடன், கண்டிபௌ பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்ததுடன் பல்கலைக்கழக கல்வியை நொச்சிமுனையிலுள்ள சித்தியின் வீட்டில் தங்கியிருந்து கல்வியைத் தொடர்ந்து வந்த நிலையிலையே இந்த விபரித முடிவினை எடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.