திருமண விருந்தில் கலந்து கொண்ட இளம் பெண் ஒருவர் திடீர் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.

 


புத்தளம் நகரத்தில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் நடைபெற்ற திருமண விருந்தில் கலந்து கொண்ட இளம் பெண் ஒருவர் திடீர் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகவீனமடைந்த அவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனமடுவ நகரைச் சேர்ந்த 20 வயதுடைய எச்.எம் அயோத்தி தேஷானி விஜேவர்தன என்பவரே உயிரிழந்துள்ளார்.

திருமண விருந்தில் இறைச்சி வகையினை சாப்பிட்டதால் இந்த இளம் பெண்ணுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

பிரதே பரிசோதனை இடம்பெற்றுள்ள நிலையில், மேலதிக பரிசோதனைகளுக்காக உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.