முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகலுக்கான காரணத்தையும் பொறுப்புக்கூற வேண்டியவர்களையும் கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நீதிபதிகளினதும், நீதிமன்றத்தினதும் சுயாதீனத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் நீதிச் சேவைகள் சங்கம் நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நீதிமன்றத்தின் பாதுகாப்பு மற்றும் கௌரவத்திற்காக தாம் தொடர்ச்சியாக முன்னிற்கிறோம் என்று மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதிபதிகளின் தொழில்சார் சங்கமான நீதிச் சேவைகள் சங்கம், நீதியரசருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் பிரதிகள் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் ஒரே தடவையில் எழுந்தமாக ஏற்பட்ட ஒன்றல்ல என நீதிச் சேவைகள் சங்கம், நீதியரசருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.