ஹமாஸ் அமைப்பை கூண்டோடு ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் -இஸ்ரேல்

 


இஸ்ரேல் மீது கடந்த 07 ஆம் திகதி திடீர் தாக்குதலை நடத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்றும் 200 ற்கும் மேற்பட்டவர்களை பணயக் கைதிகளாகவும் பிடித்துச் சென்ற ஹமாஸ் அமைப்பு அதற்கான விலையை தற்போது காஸாவில் செலுத்திக் கொண்டிருக்கிறது.

ஹமாஸின் தாக்குதலால் சீற்றமடைந்த இஸ்ரேல் காஸா மீது பயங்கரமான விமான தாக்குதலை நடத்திவருகிறது.இதனால் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டும் பெரும் எண்ணிக்கையிலானோர் காயமடைந்தும் அவதிப்பட்டும் வருகின்றனர். 

 காஸா இப்பொழுது அம்மக்களுக்கு மரணப்பொறியாக மாறிகிடக்கிறது.

இந்த நிலையில் இ ஸ்ரேல் தனது தரைவழி தாக்குதலை ஆரம்பித்துள்ளது.ஹமாஸ் அமைப்பை கூண்டோடு ஒழிக்கும் வகையில் இந்த தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.