எரிவாயு விலை இன்று அதிகரிக்கப்படுமா ?

 


மாதாந்த விலை சூத்திரத்தின்படி இம்மாதத்திற்கான சமையல் எரிவாயு விலை திருத்தம் இன்று (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனம் செப்டம்பர் 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிவாயு விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்திருந்தது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்திருந்தார்.