இந்த வருடத்திற்கான அகில இலங்கை பரதநாட்டியப் போட்டியில் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை நாவலர் மகா வித்தியாலய மாணவர்கள் குழு தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளது.
வலய மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் முதலாமிடத்தைப் பெற்ற கீழ்ப்பிரிவு பெண்கள், ஆண்கள் குழு மாகாண மட்டத்தில் நடைபெற்ற போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.
குறித்த குழு நடனத்தை யாழ். வண்ணார் பண்ணை நாவலர் மகா வித்தியாலய நடன ஆசிரியர் சுஜீவா ரங்கநாதன் நெறிப்படுத்தியிருந்தார்.
இதனிடையே தமது பாடசாலையிலிருந்து இம்முறை முதன்முறையாக தேசிய மட்டப் போட்டிக்கு மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதாக பாடசாலையில் அதிபர் க. கலியுகன் தெரிவித்துள்ளார்.