நாளை மறுதினம் (01) அனைத்து மின்சார ஊழியர்களையும் கொழும்பிற்கு வரவழைத்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு, மின்சார சபைத் தலைமையகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.