இ.நிரோசன்)
மட்டக்களப்பு கோட்டைமுனை சிரோஷ்ட பிரஜைகள் முதியோர் சங்கத்தினரால் விருது வழங்கும் நிகழ்வு விஷ்வகரம கலாசார மண்டபத்தில் இன்று ( 01) காலை 09.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
திரு . சி . சிவலிங்கம் தலைவர்
அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு . வன்னியசிங்கம் வாசுதேவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலக
ஈழகசேவை கலாசார உத்தியோகத்தர் திரு.பஞ்சாட்சரம் இராஜ்மோகன் மற்றும் மண்முனைவடக்கு உரிமை மேம்பாடு உத்தியோஸ்தார் திருமதி நிலக்சி நிருசன் ,முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி பிரியதர்சினி திருலோகச்சந்திரன்
கலந்து கொண்டனர். மற்றும் சங்க உறுப்பினர்கள் முதியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
முதியோர் தினம் பற்றிய விழிப்புணர்வூட்டலாகவும் முதியோர் சங்கத்தின் கடமைகள், செயல்திறன்கள், அவர்களுக்குரிய பிரச்சனைகள், அவர்களின் தேவைகள் பற்றிய கலந்துரையாடலாகவும் கலந்து கொண்ட முதியோர் அனைவருக்கும் நினைவுச் சான்றிதழ்களும் அன்பளிப்பு பொருட்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது